உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹெக்டர் அப்புஹாமி எம்.பியின் கருத்துக்கு சர்வதேச இந்து மத பீடம் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
91 பார்வைகள்

அண்மையில் தாய்லாந்தின் பதில் பிரதமர் பௌத்த மத நிகழ்விற்காக இலங்கை வந்த போது மத வைபவத்தில் கலந்து கொண்டார். இது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட எம்.பி ஹெக்டர் அப்புஹாமி, அரசாங்கம் இந்தியாவில் இருந்து இந்து மத தலைவர் ஒருவர் வந்த சந்தர்ப்பதில் அவருக்கு உயரிய அரச மரியாதை வழங்கப்பட்டது. பௌத்த மத நிகழ்விற்காக தாய்லாந்தின் பதில் பிரதமரும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் இந்திய இந்து மதகுருவிற்கு மாத்திரம் ஏன் அரச மரியாதை வழங்கப்பட்டது என கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் எந்த அரசும் அரச வைபவங்களில் யாரையும் இரண்டாம் தரமாக பார்ப்பதில்லை சகல மதத்தினையும் சமமாக அவர்களுக்கான மரியாதை ஏற்பாடு செய்து வருவதை நாங்களும் அவதானித்திருக்கிறோம். இந்த நிலையில் இப்புதிய அரசும் சகல மதங்களையும் சமமாக பார்க்கும் நோக்கில்தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆட்சியை கொண்டு செல்கின்றார். சகல மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றார். இந்த நிலையில் ஹெக்டர் அப்புஹாமி எம்.பி இந்திய இந்து மதகுருவிற்கு கொடுத்த வரவேற்பை மத வேறுபாடு கொண்ட சிந்தனையில் விமர்சிப்பது மற்றும் மத காழ்ப்புணர்வுடன் மக்களுக்கு ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். இவர்களை போன்றோர்தான் இனங்களுக்கு இடையே மத வேறுபாடுகளை ஏற்படுத்தி பிளவுகளை உருவாக்குபவர்கள். இவ்வாறான கருத்தை வெளியிட அனுமதிக்க முடியாது எனவும் குறித்த எம்.பியினால் வெளியிடப்பட்ட கருத்து கண்டனத்திற்குரியது எனவும் சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

78 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

67 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம்…

89 0 0