“வயதை வைத்து யாரும் கணிக்க முடியாதபடி இருங்கள்” – நடிகை கஜோல் கருத்து!
பொலிவுட் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் கஜோல். தமிழில் ‘மின்சார கனவு’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அண்மையில் நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
நடிகைகளின் தொழில் வாழ்க்கையில் வயது தொடர்பான விமர்சனங்கள் ஒரு சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட கஜோல், தோற்றம் தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
வயதை வைத்து ஒருவரை மதிப்பிடும் போக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தங்களது தோற்றம் குறித்து தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வயதை மற்றவர்கள் எளிதில் கணிக்க முடியாத வகையில் தங்களைப் பராமரித்துக்கொள்வது தன்னம்பிக்கையை வளர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கஜோலின் இந்தக் கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

