“விஜய் எனது Lucky Charm!” – நடிகை சமந்தா நெகிழ்ச்சி!
நடிகர் விஜய் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தந்தவர் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது, நடிகர் விஜய் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சமந்தா, அவரைத் தனது “Lucky Charm” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய் நடிப்பில் தான் நடித்த மூன்று திரைப்படங்கள் வெற்றியடைந்ததாகவும், இதனால் அவர் மீது தனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் தலைவராக உருவெடுத்து, அதற்காகக் கடினமாக உழைத்து வருவது தமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் திரைப்பயணம், அவரது தனிப்பட்ட பண்புகள் மற்றும் அரசியல் நோக்கிய அவரது மாற்றம் ஆகியவை தமக்கு ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

