உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை! : 1,200 பேர் கைது!!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் வெடித்த வன்முறைகளில் குறைந்தது 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 550,000 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களின் போது, பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை பதிலுக்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவங்களில் 150 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பாரிஸ், லியோன், லிமோஜஸ் உள்ளிட்ட பல நகரங்களில் கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், லிமோஜஸ் நகர மண்டபத்தின் கூரை பகுதியளவில் சரிந்துள்ளது.

மேலும், பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு வணிக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் உயர்நிலைப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது தொழிற்சங்கத்தினரும் மஞ்சள் அங்கிப் போராளிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் அரசியலில் ஆழமான நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் மற்றும் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.

இந்த நிலையில். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

84 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

89 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

89 0 0