தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு!
2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் (Re-scrutinized) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மறுபரிசீலனைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முடிவுகள் தொடர்பான மேலதிக விபரங்களையும் குறித்த இணையத்தளத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

