உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள்; தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துக.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
88 பார்வைகள்

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தச் சமீபத்திய மின்வெட்டு ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2020, 2021, 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்று நாடு தழுவிய அளவில் பாரிய மின்தடைகள் ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய கோளாறுகள், நாட்டின் மின் உள்கட்டமைப்பில் காணப்படுகின்ற நீண்டகால பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, பானந்துறை துணை மின்நிலையத்திலிருந்த உபகரணங்களுடன் குரங்கு ஒன்று தொடர்பு கொண்டதன் காரணமாக 2025 ஆம் ஆண்டில் நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ள அவர், தேசிய மின் அமைப்பின் கட்டமைப்பு எந்தளவிற்குப் பலவீனமாக உள்ளது என்பதற்கு இதுவொரு தெளிவான எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஜேர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் நாடு தழுவிய மின்தடைகள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையும் அதுபோன்ற உயரிய தொழில்சார் தரநிலைகளை எட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“தொடர்ச்சியாக ஏற்படும் இதுபோன்ற கட்டமைப்புத் தோல்விகளால் நாட்டிற்கு ஏற்படும் பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான இழப்புகளை ஒருபோதும் முழுமையாகக் கணக்கிட முடியாது.” – என்றும் அமரசூரிய கவலை வெளியிட்டுள்ளார்.

முந்தைய கோளாறுகளின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு அரசுக்குக் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மிக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தத் தேசிய பிரச்சினைக்கு ஒரேடியாக நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான வாய்ப்பாக இது அமைய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதைத் தடுக்க, நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய மின் கட்டமைப்பில் தேவையான முதலீடுகளை உடனடியாக மேற்கோள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு…

72 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!

இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ்…

71 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்து; வவுனியாவில் போராட்டம்.!

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு…

84 0 0
இலங்கை செய்திகள்

பதினொரு மாணவர்கள் கொ**லை; வசந்த கரன்னாகொடவை கைது செய்ய வேண்டும்.!

11 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத்…

83 0 0