உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பதினொரு மாணவர்கள் கொ**லை; வசந்த கரன்னாகொடவை கைது செய்ய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
83 பார்வைகள்

11 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இந்த அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“11 மாணவர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமானது மிகவும் பாரதூரமான குற்றமாகும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தான் திருகோணமலை கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தபோது, கடத்தப்பட்ட மாணவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா சுட்டிக்காட்டியிருந்தார். இதனால்தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சின்னையாவை வெறும் ஒரு மாத காலப் பகுதிக்குள்ளேயே கடற்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கினார்.” – என்று பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, போரின் போது மீட்கப்பட்ட தங்கம் தொடர்பிலும் சரத் பொன்சேகா அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டார்.

“நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து சுமார் 220 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ஆனால், பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ 110 கிலோ தங்கம் என்றே குறிப்பிட்டிருந்தார். நான் இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னரும் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அப்படியானால், புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு பெரும் பகுதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு…

72 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள்; தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துக.!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத்…

87 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!

இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்து; வவுனியாவில் போராட்டம்.!

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு…

84 0 0