உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்து; வவுனியாவில் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
85 பார்வைகள்

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கைக்கான சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்திடு!”, “13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்து!”, “சிறுபான்மை உரிமையை மதித்து நட!”, “மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை நிறுத்து!” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டம் குறித்துக் கட்சியின் தலைவர் ந.தேவகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒக்டோபர் புரட்சி நாளான ஒக்டோபர் 17ஆம் திகதி மற்றும் ரஷ்ய புரட்சியின் நினைவு நாளை முன்னிட்டும், இலங்கையில் நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை முற்றாக நீக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தியே இலங்கைக்கான சோசலிசக் கட்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டுமானால், முதற்கட்டமாக இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, மாகாணங்களுக்கிடையிலான பொருளாதாரப் பங்களிப்பை உறுதிசெய்து, உள்ளூர் தன்னிறைவுப் பொருளாதாரத்தை வழிநடத்துவது அவசியமாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை நிலையான தீர்வை வழங்கவில்லை. மாறாக, மக்களின் நியாயமான கேள்விகளையும் போராட்டங்களையும் ஒடுக்குமுறை மூலமாகவே கையாள முற்படுகின்றது.” – என்று அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கலந்துரையாடல்.!

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு…

72 0 0
இலங்கை செய்திகள்

மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள்; தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துக.!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் மின்வெட்டைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய மின் கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்த அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கத்…

88 0 0
இலங்கை செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்; சுகாதார அமைச்சருக்கு பேரவை அவசர கடிதம்.!

இலங்கைச் சுகாதார சேவையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், கலாச்சார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தீர்வு காணுமாறு கோரி தமிழ்…

71 0 0
இலங்கை செய்திகள்

பதினொரு மாணவர்கள் கொ**லை; வசந்த கரன்னாகொடவை கைது செய்ய வேண்டும்.!

11 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத்…

83 0 0