யாழில் படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு.!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (16.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ தர்சினி மற்றும் மேஜர் BHDS கருணாரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.



