உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
89 பார்வைகள்

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை வைப்பதற்கு, இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை குறைப்பதற்கு முயற்சிகள் எடுக்கும் சக்திகளோடு நாம் ஒருபோதும் சேர்ந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

-மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி கிராம மாணவர்களின் கல்வி விளையாட்டு சாதனைகளையும், மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை ஆசிரியர் சமூகத்தையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

உப்புக்குளம் மற்றும் மூர்வீதி நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினராக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் கலந்து கொண்டார்.

இதன் போது மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி கிராமங்களை சேர்ந்த ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்று சாதனைகள் புரிந்த நிலையிலும்,மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று பல்வேறு வகையிலும் சாதனைகளை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப் பட்டதோடு,குறித்த பாடசாலை ஆசிரியர் சமூகமும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

சகோதரர் அனோஜன் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.எனவே எந்த ஒரு மதத்தையும், இன்னொருவர் நிந்திக்காதீர்கள். ஒரு மதத்திற்கு எதிராக பேசாதீர்கள். ஒரு மதத்தவருடைய உள்ளங்களை நோகடிக்காதீர்கள்.

அந்த வகையில் மற்ற மதத்தவர்களையும், மற்ற இனத்தவர்களையும், மற்ற மத தலைவர்களையும் மதிக்க இஸ்லாமிய மார்க்கம் சொல்லித் தருகிறது. எனவே, அந்த அடிப்படையில் நாங்களும் நடந்து கொள்வோம்.

இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள சகோதரர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். மற்ற மதங்களை நிந்திக்காமல், மற்ற மதங்களை நோகடிக்காமல், மற்ற மதத்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லாமல், நாம் நமது மதம் எதுவோ, அந்த மதத்தை நாம் கௌரவப் படுத்துவது போல, மற்ற மதத்தையும் கவுரவப் படுத்திக் கொள்வோம்.

இந்த நாட்டிலே காலம் காலமாக இனவாதம், மதவாதம் தலை தூக்கு கின்றது. இந்த காலகட்டத்தில் நாம் இந்த நாட்டிலே அரசியல் வாதிகளாக இருந்தாலும், எங்களுக்கென்று ஒரு கொள்கை இருந்தாலும், எங்களுக் கென்று ஒரு கட்சி இருந்தாலும் நாங்கள் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு இருந்தாலும் எங்களுக் கென்று ஒரு மனிதாபிமானம் இருக்கிறது.அந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளுக்கு, நாம் இந்த நாட்டிலே மீண்டும் ஒரு இனவாதம் வந்து விடாமல், மீண்டும் ஒரு பேரினவாதம் இந்த நாட்டுக்குள்ளே வந்து மீண்டும் ஒரு பேரினவாதம் இந்த நாட்டை ஆள்வதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.நாம் ஆட்சியில் இருக்கலாம், ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். அல்லது எதிர்க் கட்சியில் இருக்கலாம். அல்லது இந்த அரசியலிலிருந்து இல்லாமல் ஆகலாம்.

ஆனால் இந்த நாட்டிலே பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய போலி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை வைப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை குறைப்பதற்கு முயற்சிகள் எடுக்கும் சக்திகளோடு நாம் ஒரு நாளும், சேர்ந்து விடக்கூடாது.

தீய சக்திகளுக்கு எதிராக இங்கு வாழக்கூடிய தேசப்பற்றுள்ள பௌத்தர்கள்,இந்துக்கள், கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டும், இந்த நாட்டினுடைய எதிர்காலம் நலமாக அமைய வேண்டும் என்பதை யாரெல்லாம் ஆசைப் படுகிறோமோ, நாம் எல்லோரும் ஒரு சக்தியாக நின்று இனவாதம் அதுவும் பேரினவாதத்தை தோற்கடிப்பதற்காக ஒன்று படுகின்ற ஒரு கால கட்டமாக இன்றைய கால கட்டம் இருக்கிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

58 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

78 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

79 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிர்!

நுவரெலியா மாவட்ட மற்றும் கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நுவரெலியா ஹட்டன்,…

62 0 0