உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
88 பார்வைகள்

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றப் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இருமாடி வீடொன்றும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வியாழக்கிழமை (15) முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் 15 மில்லியன் ரூபாய் பணத்தை வைத்திருந்த ஐந்து நபர்கள் லொறி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுப் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி 7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான இருமாடி வீடொன்றைக் கட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0