உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
59 பார்வைகள்

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்குள் (16) விநியோகத்திற்குத் தேவையான 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைச் சுமந்து வந்துள்ள ‘GAS GOODWILL’ கப்பலின் எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எதிர்வரும் சில நாட்களில் தினசரி தேவையை விட அதிகமாக, அதாவது 80,000 முதல் 100,000 வரையிலான 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை தினசரி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன்படி எரிவாயு நிரப்பும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவைச் சுமந்துள்ள ‘FRANCOIS’ என்ற கப்பல் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், இந்த விநியோகச் சரக்குகள் கிடைப்பதன் மூலம் நாட்டில் எரிவாயு விநியோகம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, சந்தைக்கு வழமை போல் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

79 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

80 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

89 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிர்!

நுவரெலியா மாவட்ட மற்றும் கண்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நுவரெலியா ஹட்டன்,…

63 0 0