உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர்

76 பார்வைகள்

பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan), இரண்டு ஐ.சி.சி முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு T20I தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்களை குவித்த சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (14) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 தொடரில் அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

பர்ஹான் தனது தொடர்ச்சியான மூன்றாவது அரைசதத்தை நேற்று பெற்றதுடன் இந்தத் தொடர் முழுவதிலும் 238 ஓட்டங்களை மொத்தமாக அவர் பெற்றார்.

இதன்மூலம் ஐ.சி.சி முழு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 229 ஓட்டங்களை பெற்றிருந்தமையே சாதனையாக இருந்தது.

அதனையே தற்போது பாகிஸ்தான் அணித் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

52 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

58 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

91 0 0