உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

விளையாட்டுச் செய்திகள் 23 மணி நேரம் முன்
57 பார்வைகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த ஓய்வு உடனடியாக அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

37 வயதான இவர், 2009 முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகள், 73 ஒருநாள் போட்டிகள் (ODI) மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவுக்காக விளையாடியது தமது வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவம் என்றும், கிரிக்கெட் வெறும் விளையாட்டு மட்டுமல்லாது தனது ஆளுமையை வடிவமைத்து மன உறுதியைக் கற்றுக் கொடுத்தது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அணியின் சீருடையை அணிந்த ஒவ்வொரு கணமும் தனது நனவான கனவு எனவும், தனக்கு ஆரம்பக் கட்டத்தில் உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

91 0 0
விளையாட்டுச் செய்திகள்

போலியான தகவல்களை வெளியிடவோ, நம்பவோ வேண்டாம்! : ஷிகர் தவான் அறிவிப்பு

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) தொடரில் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் மறுப்பு…

86 0 0