உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

விளையாட்டுச் செய்திகள் 20 மணி நேரம் முன்
51 பார்வைகள்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சி.எஸ்.ஏ. புரோ 20 ஓவர் கிண்ணத்திற்கான தொடரில் டைட்டன்சுக்கு எதிரான ஆட்டத்தில் கே.இசட்.என். இன்லான்ட் அணிக்காக களம் இறங்கிய சாட் லேகாக் 19 ஆவது ஓவரில் மட்டும் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மொத்தத்தில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த அவர் 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினாலும் அவரது அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஒட்டுமொத்த ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய 4 ஆவது பவுலர் ஆவார். ஏற்கனவே வங்காளதேசத்தின் அல் – அமின் ஹூசைன், இந்தியாவின் அபிமன்யு மிதுன், இந்தோனேசியாவின் கேட் பிரியந்தனா ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

91 0 0
விளையாட்டுச் செய்திகள்

போலியான தகவல்களை வெளியிடவோ, நம்பவோ வேண்டாம்! : ஷிகர் தவான் அறிவிப்பு

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) தொடரில் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் மறுப்பு…

86 0 0