உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
14 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான கருத்தாடல்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேசப் பொது அமைப்புகள் ஊடாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பால், சவூதி அரேபியாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான முயற்சிகள் தொடரும் நிலையில், சில விஷமிகளின் கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான கலந்துரையாடல்களிலும் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையில் அமைவதை அவதானிக்க முடிவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதையும், விஷமத்தனமான பேச்சுகள் மற்றும் முகநூல் பதிவுகளைப் பகிர்வதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை…

79 0 0
இலங்கை செய்திகள்

உலக முட்டை தினம் :நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட சமூக நலன்புரி நிகழ்வு வெள்ளிக்கிழமை (09)…

45 0 0
இலங்கை செய்திகள்

மருதமுனை கடற்கரையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த…

72 0 0
இலங்கை செய்திகள்

மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர், ஊழியர்களின் அசமந்தப் போக்கு: நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச சபை உறுப்பினர் கடிதம்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச…

58 0 0