உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலக முட்டை தினம் :நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
45 பார்வைகள்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கும் விசேட சமூக நலன்புரி நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது.

நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி மயூரன் யாமினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 25 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 25 முட்டைகள் வீதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (Midwives) மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது தலைமை உரையாற்றிய அரச கால்நடை வைத்தியர் டாக்டர் திருமதி மயூரன் யாமினி, முட்டையைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புரதம், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்து நன்மைகள் குறித்துக் கர்ப்பிணிப் பெண்களுக்கு விரிவான விழிப்புணர்வை வழங்கினார்.

கர்ப்பிணிப் பெண்களின் போஷாக்கு மட்டத்தை உயர்த்தும் நோக்குடனும், முட்டையின் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் அமைந்த இந்நிகழ்வு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான PSDG 2026 வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை…

77 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள் மற்றும் முரண்பாடான…

13 0 0
இலங்கை செய்திகள்

மருதமுனை கடற்கரையில் ஆண் ஒருவரின் சட@லம் மீட்பு

மருதமுனை கடற்கரை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (09) மாலை 66 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பெரியநீலாவணைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த…

65 0 0
இலங்கை செய்திகள்

மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர், ஊழியர்களின் அசமந்தப் போக்கு: நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச சபை உறுப்பினர் கடிதம்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகளில் அசமந்த போக்கு காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச…

58 0 0