மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் 660 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து, அதிமுக 375, திமுக 335, நாம் தமிழர் கட்சி 39, மார்க்சிஸ்ட் 19 வாக்குகள் பெற்றுள்ளன.
தாராபுரம் தொகுதியில் தவெக 1237 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
திமுக 632, அதிமுக- 524, சிபிஐ-6, நாம் தமிழர் கட்சி 3 வாக்குகள் பெற்றுள்ளன.