உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

வட்டு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் விழாவானது செப்டம்பர் 11, 12, மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

அந்தவகையில் இன்று முதலாவது நாள் நிகழ்வாக பரிசளிப்பு விழா பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து தலைமையுரை, கலை கலாச்சார நிகழ்வுகள், விருந்தினர்கள் உரை, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. இதன்போது நிறுவனர் நினைவுப்பேருரையை ஸ்தாபகரின் பூட்டனும், UK சட்ட உதவியாளருமான இ. சாய்பிரசாத் ஆற்றினார்.

கல்லூரியின் அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் வடமாகாக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினர் வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலனும் கலந்துகொண்டனர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கல்லூரிச் சமூகம் அழைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு கூடியது

பல்கலைக்கழகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை மிகவும் திறம்பட முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் ஆலோசனை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி…

108 0 0
இலங்கை செய்திகள்

220 இலட்சம் மக்களின் உரிமைகளைப் பறித்துள்ளது அநுரவின் அரசு! : சஜித் குற்றச்சாட்டு!!

“நமது நாட்டின் 9 மாகாணங்களிலும் தற்போதைய அரசு பொய்களைக் கூறிக்கொண்டு பொய்ப் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வடக்கு,…

95 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து : நால்வர் காயம்!

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் டிப்பர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு…

161 0 0
இலங்கை செய்திகள்

பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி 21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின்…

130 0 0