உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

சத்துருகொண்டான் படுகொ@லையின் 36 ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
102 பார்வைகள்

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம்இன்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவற்படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது.

இந்தப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது.

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களான அருட்தந்தை க.ஜெகதாஸ்,கண்டுமணி லவகுகராசா, எஸ்.சிவயோநாதன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதான ஈகச்சுடர் கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் கிராமங்களை சேர்ந்த உறவுகளை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதிகோரியும் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவமுகாம் பகுதியில் அகழ்வாய்வு முன்னெடுக்குமாறு கோரியும் மகஜர் ஒன்றும் இதன்போது வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில்…

110 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri),…

53 0 0
இலங்கை செய்திகள்

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொ@லைச் சதி!

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொ@லை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை…

151 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல்…

122 0 0