உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு – வேலணை அராலிச் சந்தியில் சம்பவம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
112 பார்வைகள்

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri),…

46 0 0
இலங்கை செய்திகள்

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொ@லைச் சதி!

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொ@லை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை…

135 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே ’22’ பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்? – சஜித் கேள்வி!

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே’22’ பற்றி ஜனாதிபதி பேசுவது ஏன்? நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்காத நிலையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாகக்…

119 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழி மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் பேரணி!

செம்மணி புதைகுழி விடயம் மற்றும் தமிழர்கழின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி பேரணி ஒன்று தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த பேரணிக்கு ஆதரவு கோரும் முகமாக…

120 0 0