உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

மரத்துடன் மோதுண்டு இளைஞன் பலி

107 பார்வைகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் =**ம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொரலஸ்கமுவ து**க்கிச்சூ**டில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற து*க்கிச்சூ*ல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கல மாவத்தையில் இன்று (04) இந்த துப்பாக்கிச்சூ*டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

28 0 0
இலங்கை செய்திகள்

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகள் குறைப்பு

உலை எண்ணெய் மற்றும் நெப்தா எரிபொருள் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குனர் மயூர நெத்திகுமார, இன்று…

49 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் பனந்தோப்பில் திடீர் தீப்பரவல்

மன்னார் – தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் உள்ள பனந்தோப்பில் இன்று (04) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் தொடர்பில் தகவல் கிடைத்ததைத்…

58 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

56 0 0