உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

ரசிகர்கள் எதிர்ப்பால் நியுசிலாந்து வீரருக்கு விழுந்த ஆப்பு!

விளையாட்டுச் செய்திகள் 2 மணி நேரம் முன்
56 பார்வைகள்

கவுண்டி செம்பியன்ஷிப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியுசிலாந்து வீரர் ஸ்காட் குக்கலைன், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹாம்ப்ஷயர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வார்விக்ஷயர் அணிக்கு எதிரான கவுண்டி போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்ற அடுத்த நாளே, சமூக வலைதளங்களில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பால் அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு மற்றும் அதன் வழக்கு விசாரணைகள் காரணமாகவே ரசிகர்கள் இவருக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர்.

“எங்கள் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஸ்காட் குக்கலைன் இனி ஹாம்ப்ஷயர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறோம்” என கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

43 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் இருந்து லபுஷேன் நீக்கம்!

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஷேன், சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தொடரில்…

59 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேசக் காற்பந்தாட்டத்திலிருந்து மெஸ்ஸி ஓய்வு:ஷிகர் தவான், யுவராஜ் சிங் வாழ்த்து

அர்ஜென்டீனா காற்பந்தாட்ட அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (39) சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஷிகர் தவான்…

76 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நகித் ராணா இல்லை: பங்களாதேஷ் தேர்வுக்குழு அதிரடி முடிவு!

சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் நகித் ராணா, ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார்…

60 0 0