உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

காசாவில் இருந்து பின்வாங்க முடியாது – நெதன்யாகு விடுத்த எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

காசாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “மஞ்சள் கோடு” எல்லைக் கோட்டிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஒருபோதும் பின்வாங்காது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார்.

காசாவிலுள்ள ராணுவ முகாம் ஒன்றிற்கு நேரடியாகச் சென்ற நெதன்யாகு, “நாங்கள் இந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்; இந்த எல்லையிலேயே தொடர்ந்து நீடிப்போம்” என்று உறுதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 2025 இல் அமலுக்கு வந்த முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கிய எல்லைக் கோடே இந்த “மஞ்சள் கோடு” என அழைக்கப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவ வரைபடங்களின்படி, இந்த எல்லைக்கோடு காசாவின் கிழக்கு எல்லையிலிருந்து 1.5 கி.மீ முதல் 6.5 கி.மீ வரை ஊடுருவி, காசாவின் மொத்தப் பரப்பளவில் சுமார் 58 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எகிப்துக்கு சீன ஜனாதிபதி பயணம்

மேற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். எகிப்து தலைநகர்…

37 0 0
உலக செய்திகள்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளை முன்னெடுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

39 0 0
உலக செய்திகள்

தவிர்க்க முடியாத கட்டத்தில் அமெரிக்கா-ஈரான் போர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் இல்லாத, அதேசமயம் முழு அளவிலான போரும் இல்லாத ஒரு பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இது எந்த…

62 0 0
உலக செய்திகள்

திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு.!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில்…

44 0 0