உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பல்கலைக்கழக பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரி, விரிவுரையாளர்கள் நாளை போராட்டம்

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
68 பார்வைகள்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக நாளை போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது. 

நாளை (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார். 

இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமாக அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதற்கான யோசனைத் திட்ட மொன்றை அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார். 

எனினும், அந்த யோசனைகளையோ அல்லது கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், இப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கலந்துரையாடியதாகக் கூறிய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமும் அறியப்படுத்தியதாகத் தெரிவித்தார். 

இருப்பினும், இதுவரை அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பல விரிவுரையாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார. 

2015ஆம் ஆண்டளவில் அரசுப் பல்கலைக்கழக அமைப்பிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அது ஒரு வருடத்திற்கு 45,000 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

எனினும், 2015இல் அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் 5,800 விரிவுரையாளர்கள் இருந்த போதிலும், தற்போது அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

43 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

65 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

28 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

42 0 0