உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

டித்வா புயலால் படகுகளை இழந்த மீனவர்களுக்கான மீன்பிடி படகுகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
51 பார்வைகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட கிராஞ்சி மற்றும் செபஸ்தியார்புரம் ஆகிய பகுதிகளில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டு கடற்தொழில் படகுகளை இழந்த தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கான மீன்பிடி படகுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி மற்றும் செபஸ்தியார் புரம் ஆகிய பகுதிகளில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டு கடற்தொழில் படகுகளை இழந்த இரண்டு மீனவர்களுக்கு. தலா ஏழு இலட்சத்து பதினான்காயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடிப் படகுகள் இன்று (01-09-2026) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மீன்பிடி வள்ளங்களை வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர், கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கடற்தொழில் அமைச்சின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0