உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

சவூதியில் ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ நிரந்தர செயலகம்

உலக செய்திகள் 24 மணி நேரம் முன்
41 பார்வைகள்

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைச்சர்கள் மட்டத்திலான முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி மெக்காவில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோரால் இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

உறுப்பு நாடுகளின் தற்காப்புத் திறனை மேம்படுத்துதல், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்தல், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்டவை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புக் கட்டமைப்பை ஒத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் முதலாவது உயர்மட்டக் கூட்டத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காலநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை தேவை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவு, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக…

78 0 0
உலக செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க ராணுவ செயலாளர் பதவி விலகல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், சுமார் 18 மாதங்கள் பதவி…

47 0 0
உலக செய்திகள்

நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது. திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத்…

64 0 0
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்:

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய்…

76 0 0