உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
46 பார்வைகள்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேர விசாரணையைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பின்னர் மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்குப் புறம்பாக, தேசிய லொத்தர் சபையில் ஐந்து நபர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்து, அவர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக ரவி கருணாநாயக்க முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகியிருக்கவில்லை. மேலும், இரு நாள்களுக்கு முன்னர் பத்தரமுல்ல, ராஜமல்வத்த வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு விசாரணையாளர்கள் சென்றிருந்த வேளையிலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒரு இறாத்தல் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய விலை திருத்தமானது…

8 0 0
இலங்கை செய்திகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைக் கொ@லை செய்கின்றது அரசு!

இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனப் பெருமை பேசி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித்…

60 0 0
இலங்கை செய்திகள்

மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை.!

கடந்த ஐந்து ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு, அடுத்த…

64 0 0
இலங்கை செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச…

68 0 0