உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் மதுபோதைத் தாக்குதலுக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
48 பார்வைகள்

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்றுமுன்தினம் நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின் மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மத நல்லிணக்கத்தின் மூலம் சமூகத்தை வலுப்படுத்த புதிய நடவடிக்கை.!

கடந்த ஐந்து ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நுவரெலியா மாவட்ட சர்வமதக் குழு, அடுத்த…

48 0 0
இலங்கை செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச…

52 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் : உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள…

38 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே…

58 0 0