உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் – விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான விசேட இருதரப்பு சந்திப்பொன்று இன்று (ஆகஸ்ட் 31) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் (அன்றைய சிலோன்) நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டி 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி நடத்தப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு 100 ஆண்டுகளை எட்டியுள்ளதை முன்னிட்டு, 2027 ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள விசேட நினைவுச் சின்ன கிரிக்கெட் தொடரை ஒழுங்கமைப்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டித் தொடரைக் பார்வையிடுவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரினால் அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், இலங்கையின் ரக்பி விளையாட்டு வளர்ச்சி, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் (Youth Exchange Programmes) மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நியூசிலாந்து அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது உறுதி அளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச…

41 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் மதுபோதைத் தாக்குதலுக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று முன்னாள்…

14 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் : உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள…

32 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே…

53 0 0