உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

புற்றரைக்கு தீ வைத்த நபர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
60 பார்வைகள்

யாழ் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடைப்பட்ட பகுதியில் உள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் உருவாகி இருந்தன.

இதனால், பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காணவோ கைது செய்யவோ முடியாத நிலையில், வேலணை பிரதேச சபை நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச…

41 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் மதுபோதைத் தாக்குதலுக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று முன்னாள்…

15 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் : உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள…

32 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே…

53 0 0