முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு கோரிக்கை.!
கிளிநொச்சி முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு கோரி கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி பூநகரி, நல்லூர் KN-59 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன் கருதி, மேலதிக பேருந்து சேவையை நடத்துமாறு ‘புதிய பாதை கொத்தனி அமைப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசதி குறைந்த 693 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது தினசரி பயணங்களுக்குப் பேருந்து சேவையையே முழுமையாக நம்பியுள்ளனர்.