உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்கக் கோரி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
55 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்க கோரி இன்றைய தினம் (31) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி உமையாள்புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற கடவைகள் காணப்படுகின்றன.

இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அண்மையில் புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரயில்வே திணைக்களம் ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

44 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0