உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
23 பார்வைகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் இணைத் தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அலுவலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 31.08.2026 ஆம் திகதி அன்று எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு பூராகவும் கிட்டத்தட்ட 1,20,000 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள்.

அவர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாடு பூராகவும் உரிமை சார்ந்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளார்கள்.

அந்த போராட்டமானது எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய போசன இடைவேளையின் போது சரியாக 12.00 மணி அளவில் நாடு பூராகவும் தங்கள் கடமை புரியும் அலுவலகங்களுக்கு முன்பாக ஒரு 30 நிமிடங்கள் தங்களது அடிப்படை உரிமைகளை கோரியவர்களாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக அரச மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்ததாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

இந்த போராட்டத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளாக சம்பள உயர்வு பிரச்சினை, முறையான சேவைப்பிரமாணக் குறிப்பு இல்லாதது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள்,கல்வித் தராதத்திற்கு ஏற்ற வகையான சம்பள அளவுத்திட்டமின்மை, அரச சேவையில் அதிகார வரிசையில் ஒரு நிலையான இடத்தை உறுதிப்படுத்துதல் தகுதியடிப்படையில் நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை அதற்கு இணையான சேவைகளில் நுழைவதற்கு வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், முறையான பணிப்பட்டியலை வெளியிடுதல் ,கீழ்நிலை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கண்காணிக்கும் வாய்ப்புகளை நீக்குதல், தரப் பதவி உயர்வுகளை கால இடைவெளி 5 ஆண்டுகளாக குறைத்தல், தடைதாண்டல் பரீட்சை தொடர்பான உத்தரவாதம், உயர்கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல், அதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்துதல், கொடுப்பனவுகளை வழங்குவதில் முறையான பொறிமுறையைக்கையாளுதல், வெளிக்கள உத்தியோகத்தர்கள் வெளிக்களங்களுக்கு செல்லும்போது பிரயாணக் கொடுப்பனவுகளை அதிகரித்தல்உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து, அதற்கான நிலையான ஒரு தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரி, கவனயீர்ப்பாக இந்த அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைக் கூறும் முகமாக இந்த போராட்டம் அமைய இருக்கின்றது.

அன்பான அரச உத்தியோகத்தர்களே, குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களே! நாம் எதிர்கொள்ளும் இந்த சவால்களில் இருந்து விடுபடுவதற்காகவும், அதிகரித்த வாழ்க்கைச் செலவில் இருந்து நாம் விடுபடுவதற்காகவும், இந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கையை ஒரு ஆரோக்கியமாகவும் சந்தோஷமானதாகவும் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வாழ்வதற்காகவும் நாம் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

எனவே அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களது நேரத்தை ஒதுக்கி ஆதரவு தருமாறு எமது தொழிற்சங்கம் சார்பாக உங்களை வினையமாக கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. கடந்த கால ஆட்சியாளர்களும் ஆட்சியும் எமது தொழிற்சங்கங்கள் போராட்டங்களை கவனத்தில் எடுத்திருந்தாலும், முறையான அதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.

கடந்த காலத்தில் அப்பால் தற்பொழுது அமைந்த அந்த அரசு மீது நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களாக அதிக நம்பிக்கையை வைத்திருந்தோம். ஏனென்றால் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களின் ஆதரவோடுதான் இந்த அரசானது ஆட்சிப் பீடம் ஏறியது.

ஆனாலும் நாம் அந்த நம்பிக்கையை தற்பொழுது மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம் என்ற மனவேதனையோடு இருக்கின்றோம். ஏனென்று சொன்னால் எமக்கான அடிப்படை உரிமையில் சம்பள உயர்வுக்கான அந்த கோரிக்கை முன்னேற்றப்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று கூறி கூறி காலம் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முறையான சேவைப்பிரமாணக் குறிப்பு தயாரிப்பதில் கூட இன்னும் இழுபறி நிலையே ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே இதற்கான நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். இந்த அரசும் எம்மை ஏமாற்றக் கூடாது.

எமது உத்தியோகத்தர்களுக்கான அதாவது நீதியான அந்த கோரிக்கைகளை செவிசாய்க்க வேண்டும். அதற்காக எமது போராட்டம் ஒரு கவனயீர்ப்பாக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல, அரசை கவனயீர்ப்பாக எமது உரிமையைப் பெற்றெடுப்பதற்கான போராட்டமாக அமைகின்றது.

எனவே எமது போராட்டத்தை கவனத்திற்கொண்டு எமக்கான அடிப்படை உரிமைகளை தருவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த போராட்டம் நீடிப்பதா இல்லையா என்பதை இந்த அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.

இனிவரும் காலங்களில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0