உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
41 பார்வைகள்

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான “குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” என்ற விசேட கலந்துரையாடல் இன்று (29) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு ஹோட்டல் ஈஸ்ட் லகூனில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் குரல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைத்து, அவற்றை கொள்கை ரீதியாக முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் தளமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளைஞர் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேரடி உரையாடல் மூலம் இளைஞர்களின் பங்கேற்பை அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இளைஞர் யுவதிகளினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை கேட்டறிந்துகொண்டனர்.

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பிற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக கோலேசன் போ இன்குலூசிவ் இம்பக்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மிக முக்கியமாக இந்த அரசியல் உரிமையும் பொருளாதார உரிமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த அரசியல் உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுது, அதாவது அதிகாரப் பரவலாக்கம்—நீங்கள் மாகாண சபை என்று கேட்ட விடயம்—பொதுவாக அதிகாரப் பரவலாக்கம், ஏனென்றால் எங்களுடைய அதிகாரத்தை எல்லா மட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற பொழுது, இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மிக இலகுவாக முன்னெடுத்துத் தீர்க்கக்கூடியதாக இருக்கும்.

ஒரு நாட்டில் வந்து பல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலே இந்த பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அங்கு அரசியல் பிரச்சினைகள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்ற பொழுதுதான் அங்கு பொருளாதார ஸ்திரத்தன்மை இருக்கும்.

முக்கியமாக எங்களது நாட்டில் வந்து மிக முக்கியமாகத் தேவையாக இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட வேண்டிய, கடந்த காலங்களிலே பொருளாதார நெருக்கடியிலே சிக்கித் தவித்த நாடு இப்போது தற்காலிகமாக ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றாலும் கூட, அது நிரந்தரமாக உங்களுடைய இந்த நீங்கள் முன்னிலைப்படுத்திய அல்லது முகவரியிட்ட விடயங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்றால், மிக முக்கியமாக அந்தச் சமத்துவமும் எல்லாரும் இங்கு பல்லினம் வாழுகின்ற சமூகச் சமத்துவம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரிதான், சிறுபான்மையாக இருந்தாலும் சரிதான்எல்லோருக்கும் உரிய சமத்துவம் இருக்க வேண்டும்.

இளைஞர், யுவதிகளுக்கான சமத்துவம், மதங்களுக்கான சமத்துவம், இன்னும் எல்லா வகையிலும் அந்தச் சமத்துவம் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த அரசியல் உரிமைகள் வந்து உண்மையாக அதிகாரப் பரவலாக்கங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்ற பொழுது, பொருளாதார ஒரு ஸ்திரத்தன்மை அங்கு அடையப்படும்.

பல விடயங்கள் வேலைவாய்ப்பு அல்லது போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றது விளையாட்டு இந்த விடயங்களெல்லாம் நீங்கள் சொன்னதில் எனக்கு நிறைய உடன்பாடு இருக்கின்றது. மாகாண சபைகள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த விடயங்களை ஒவ்வொன்றும் ஒரு கள நிலைகளிலும் பிரதேச சபை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாகாணங்களின் ஊடாக இந்த அடிப்படை விடயங்கள் உண்மையாக உங்களுடைய குரலாக வருகின்ற பொழுது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

இந்த எண்ணக்கருக்கள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த நாட்டில அந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் ஊடாக குரலாக இந்த எண்ணப்பாடுகளை நாங்களும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது, வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, உண்மையாக ஒரு வலுவான நிலையில் இருக்கின்ற அரசு நான் அரசாங்கக் கட்சியைப் பற்றிச் சொல்லவில்லை, அரசு இந்த இளைஞர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் தான் அந்த வாக்குகளைச் செலுத்துகின்ற தீர்மானிக்கின்ற சக்திகளாக வருகின்றீர்கள்.

உங்களுடைய எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கின்றதோ அதைச் சார்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையிலே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு அப்பால் மிக முக்கியமான ஒரு விடயம்: எல்லா விடயங்களும் இப்ப நீங்கள் தொழில் துறையில் அல்லது அரசியலில் அல்லது இந்த விடயங்களில் வெற்றி பெற வேண்டும் என்றால், முதலாவது எனது நிலைப்பாடு என்னுடைய பொதுவான நிலைப்பாடு.

நாங்கள் எங்களுக்குள் இருந்து அந்த மாற்றங்களைக் கொண்டு வருகின்ற பொழுதுதான் வெற்றி பெற்றவர்கள் அது பொருளாதாரத்தில் இருந்தாலும் சரிதான், தொழில் துறையில் இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான்.

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து எங்களுக்குள் வர வேண்டும்.
என்று கூட நீங்கள் நிறைய இளைஞர்கள் பங்கு பற்றியிருக்கின்றீர்கள், இதிலே கூட நிறைய சமத்துவமின்மை தெரிகின்றது. இதில் ஆண், பெண் என்ற அடிப்படையிலே சமத்துவம் காணப்படவில்லை.

உங்களுடைய இந்த கூட இந்த பெண்கள் முன்னிலையாகப் பெரிதாக வந்த மாதிரி தெரியவில்லை. அப்ப சமத்துவம் எல்லா நிலைகளிலும் உங்களில் இருந்து அந்த மாற்றம் கொண்டு வரப்படுகின்ற பொழுது, நீங்களும் வெற்றி பெற்றவர்களாக, நீங்களும் தலைவர்களாக, உங்களுடைய கருத்துக்களைத் தீர்மானிக்கிற சக்திகளாக மாற்றக்கூடிய பண்பு இருக்கும்.

அரசியல்வாதிகள் தான் எல்லாம் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கம்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்றதற்கு அப்பால், இப்ப நானும் அந்தச் சமகாலப் பாதைகளிலே கடந்து வந்தவன், கல்வி அந்தத் துறைகளில் இருந்து வந்தவன். நான்தான் எனக்குரிய களச் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதாரமாக நான்தான் எனக்குரிய களச் சூழ்நிலையை உருவாக்கி வெற்றி பெற வேண்டும். அரசியலாக நான்தான் எனக்குரிய களச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0