22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் மூன்று இடையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர, ஓய்வூதியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் கே.சரத் லால் பெரேரா மற்றும் சட்டத்தரணி ஜானக அதிகாரி ஆகியோர் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்ட ரீதியாகவே நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், சர்வஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஊடாக நிறைவேற்றலாம் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் மனுதாரர்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராராச்சி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக முதலாவது இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.