கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.