உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் 2/3 பெரும்பான்மை ஆணை வழங்கினர்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
43 பார்வைகள்

தற்போதைய அரசுக்கு நாட்டு மக்கள் வழங்கிய 2/3 பெரும்பான்மை மக்கள் ஆணை என்பது பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என்றும், தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான ‘முறைமை மாற்றத்தை’ ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை மூன்று பிரதான காரணங்களுக்காக வழங்கியுள்ளனர். முதலாவதாக, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிப் பிள்ளைகள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது, இரண்டாவதாக, சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, மூன்றாவதாக, வங்குரோத்தான பொருளாதாரத்தை மீட்டு முன்னோக்கிச் செல்வது என்பனவாகும்.

நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்வாதிகள், பெரும் தொழில் உரிமையாளர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஆசிய பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளதுடன், அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்த நாடு தற்போது நேர்மறையான நிலைக்கு மீண்டெழுந்துள்ளது.

போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் துறைகளிலும் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றத்தின் பெரும்பகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

2 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0