உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 23 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

பிரதேச சபையின் நிதியில் 330 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த உள்ளக விளையாட்டு அரங்கு, வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் அமையவுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர மேயர், வடக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்திலேயே இந்தப் பாரிய விளையாட்டு உட்கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், பிரதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய உட்கட்டமைப்புத் திட்டமாகவும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கு அமையவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

58 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

60 0 0