உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வனாத்தே சதுவின் உதவியாளரது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
59 பார்வைகள்

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள 141 ஆம் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (23) முற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சது’ எனப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் உதவியாளர் ஒருவரது வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அந்த கைக்குண்டு வெடிக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையே இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாகப் பாதுகாப்புப் படையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த நாட்களிலும் இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீதும் இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அதில் ஒரு குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

72 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

76 0 0