உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
62 பார்வைகள்

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பியாங்யாங் பகுதிக்கு கிழக்குக் கடலை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைப் பிரதானிகள் தெரிவித்துள்ளனர். இவை சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்து விழுந்துள்ளன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தென்கொரியா அவசர பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவத்தைப் பூரண தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறும் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தூதரக உறவுகளை மீண்டும் ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி, பயிற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பைக் குறைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை முடிவடையவுள்ள நிலையிலேயே வடகொரியா இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

66 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள்…

55 0 0
உலக செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு…

78 0 0
உலக செய்திகள்

பெருவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்று…

75 0 0