உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
72 பார்வைகள்

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு – வேலணைத் தீவை இணைக்கும் வாணர் தாம்போதியில் வரலாற்றில் முதன்முறையாக ஒளியூட்டும் நோக்கில் 200 வோட்ஸ் சூரிய சக்தியுடைய ( சோலர் ) 40 மின்விளக்குகள் பொருத்தும் செயற்பாடு நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை நிறுவுனர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்கள் வழங்கிய ரூபாய் பத்து இலட்சம் நிதியுதவியில் 4 கிலோமீற்றர் நீளத்திற்கு காணப்படுகின்ற வாணர் தாம்போதியில் குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

மிகவும் ஒடுங்கியதாகவும் போக்குவரத்திற்கு சிரமமாகவும் காணப்படுகின்ற குறித்த கடற்பாலத்தில் மிக நீண்டகாலமாக ஒளி விளக்குகள் பொருத்தப்படவேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தீவக சிவில் சமூகம் அமைப்பினரின் இடைவிடாத முயற்சியின் காரணமாக குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் திரு. கே. வி. தவராசா, தீவகம் சிவில் சமூகம் தலைவர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன், இந்து மத குருக்கள் முரளிதர சர்மா, வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன், தீவகம் சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வேலணைப் பிரதேச சபையினர் வழங்கியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்.!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வெல்ல வீதிய…

77 0 0