உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

உலக செய்திகள் 13 மணி நேரம் முன்
84 பார்வைகள்

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று (23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதுடன் நகரத்தின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டுள்ளது.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், நிலநடுக்கம் 68 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த மையம் மேலும் தெரிவித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச பிடியாணை பிறப்பிக்குமாறு துருக்கி கோரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ வெளியிடக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற…

63 0 0
உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

78 0 0
உலக செய்திகள்

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து,…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள்…

71 0 0