உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசு படுதோல்வி.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
59 பார்வைகள்

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினையல்ல, தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதே அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ காலி பகுதியில் நேற்று (22) நடைபெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கும் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பின் உறுப்பினர்களினதும் வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. அழகாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளியுள்ளது.

திறைச்சேரி நிரம்பி வழிகிறது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் வறுமையில் நிரம்பியுள்ளது. திறைசேரியை நிரப்பி சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாது. ஆகவே மக்களுக்கு அந்த நிதியில் நிவாரணமளிக்க வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினையல்ல, தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவது உறுதி என்பதே அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என நாமல் ராஜபக்‌க்ஷ குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0