உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உந்துருளி மோதி சிறுவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
66 பார்வைகள்

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் கோட்டை கல்லாறைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30 மணியளவில் 3 சிறுவர்கள் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

இதில் உந்துருளியை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0