உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம்; சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும்.!

இலங்கை செய்திகள் 15 மணி நேரம் முன்
49 பார்வைகள்

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் மக்கள் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இறைமை, அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் நாட்டின் ஜனநாயக கட்டமைப்புடன் நேரடியாக தொடர்புபட்ட விடயங்களில் மக்களின் நேரடி கருத்தை அறிந்துகொள்வது அவசியம் என தமிழரசுக் கட்சி கருதுகிறது.

அந்த வகையில், அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுடன் மட்டுப்படுத்தாமல், மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்வைக்க வேண்டும் என கட்சியின் அரசியல் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் தரப்புகளுக்கும் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் இந்த நிலைப்பாடு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான எதிர்கால அரசியல் கலந்துரையாடல்களில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0