சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது.!
வென்னப்புவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பான கும்பல் குறித்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (22) இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
இதன்போது, நைனமடமாவைச் சேர்ந்த 51 வயதுடைய குறித்த சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் அடங்கிய 90 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.