உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

22ஆவது திருத்தத்தை விட மக்களின் தேவைகளே முக்கியம் : மஹிந்த சுட்டிக்காட்டல்

52 பார்வைகள்

இலங்கையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதை விட, மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே அரசு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக அரசால் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது பேசப்பட்டு வரும் இந்த 22ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதை விட மக்களுக்கு ஆற்ற வேண்டிய பல பணிகள் அரசுக்கு உள்ளன. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை முழுமையாகச் செய்து முடித்த பின்னர், இவ்வாறான எந்தவொரு சட்டத் திருத்தத்தையும் கொண்டுவருவதில் ஆட்சேபனை இல்லை.

தற்போது நாட்டிலுள்ள மக்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவசியமற்ற விடயங்களையே அரசு முன்னெடுத்துச் செல்கின்றது.

உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் இன்றி மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களைச் செய்ய முற்படும்போதே நாட்டில் பல சிக்கல்கள் உருவாகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0