உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

93 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்! : 71 பேர் உயிரிழப்பு!!

54 பார்வைகள்

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். தெற்கு மாகாணத்தில் 13 ஆயிரத்து 719 பேரும், மத்திய மாகாணத்தில் 8 ஆயிரத்து 476 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 19 ஆயிரத்து 945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 588 பேரும், கண்டியில் 6 ஆயிரத்து 786 பேரும், மாத்தறையில் 6 ஆயிரத்து 82 பேரும், களுத்துறையில் 6 ஆயிரத்து 59 பேரும், காலியில் 5 ஆயிரத்து 133 பேரும், இரத்தினபுரியில் 4 ஆயிரத்து 981 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதாந்தப் பதிவுகளின்படி ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29 ஆயிரத்து 964 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜூன் மாதத்தில் 21 ஆயிரத்து 533 பேரும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாள்களில் 8 ஆயிரத்து 297 நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0