இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.!
வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தை மையப்படுத்தி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் திரு. மு.ராம்கி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் 240க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.
நில்தண்டாஹின்ன ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் கண்டி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் முழுமையான பங்களிப்புடன் இம் மருத்துவ முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.
100 பயனாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், எதிர்பார்ப்பையும் தாண்டி 247 பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இரு மருத்துவர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு மருத்துவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது சேவைகளை வழங்கியமை சிறப்பம்சமாகும்.
நிகழ்வு குறித்து பிரதேச சபை உறுப்பினர் மு.ராம்கி தெரிவிக்கையில்:
குருந்தோயா வட்டாரத்தில் முதன்முறையாக இத்தகையதொரு பிரம்மாண்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இங்கு வருகை தந்த மக்களின் வாழ்த்துகளும் நன்றிகளும் எனக்கு மேலதிகமாகச் சேவையாற்ற பெரும் மனநிறைவையும் ஊக்கத்தையும் அளித்துள்ளன என்றார்.
இப்பகுதியில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஆதரவளித்த மருத்துவக் குழுவினருக்கும் நல்நெஞ்சங்களுக்கும் நன்றி தெரிவித்த திரு. மு.ராம்கி அவர்கள், எதிர்காலத்திலும் மக்களுக்குப் பயனுள்ள பல திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.



